TCE ENVIS RP - Environment Days - National Bird Day 2024

National Bird Day 2024

  • Jan 5th 2024

    Download Attachment
    TCE ENVIS RP
    under Ministry of Environment, Forest and Climate Change, Government of India
    (May, 2017)


    Scroll down to Read More...

ஜனவரி 5 பறவைகள் தினம்:
(Jan 5 National Bird Day)
அழிவின் விளிம்பில் உள்ள டாப் 5 பறவைகள் எவை தெரியுமா?
(Do you know what the top 5 birds on the brink of extinction are?)

Credit: https://tamil.abplive.com/news/india/national-bird-day-2022-date-significance-and-a-look-at-top-5-rarest-birds-in-the-world-33825

ஜனவரி 5 ஆம் தேதி தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அழிந்துவரும் பறவை இனங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
(Today is National Birds Day on January 5th. Today we will learn about the endangered bird species.)

இன்று ஜனவரி 5 ஆம் தேதி தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன்மையாக இது அமெரிக்காவில் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சூழலை விரும்பும் அனைவரும் நினைவுகூற வேண்டிய நாள் இது. இந்த நாள் அழிந்துவரும் பறவை இனங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம். இயற்கை ஆர்வலர்கள், சூழலியலாளர்கள், பறவை காணலில் ஈடுபடுவோர் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5 ஆம் தேதிய தேசிய பறவைகள் தினமாகக் கடைப்பிடிக்கின்றனர். 1984ல் பென்சில்வேனிய மாகாணத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சார்லஸ் அல்மான்ஸோ பாபோக் என்பவர் பறவைகளைக் கொண்டாட விடுமுறை அறிவித்தானர். அதிலிருந்தே தேசிய பறவைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பறவைகளின் வசிப்பிடத்துக்கே சென்று பறவைகள் காணுதலையும், பறவைகள் காணுதலுக்கு மக்களை அழைத்துச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பறவை கணக்கிடும் பணி ஜனவரி 5ல் நடைபெறுவதாலேயே இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது. இந்த நாளில் நாம் அரிய வகைப் பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

(Today is National Birds Day on January 5th. It is primarily observed in the United States. But this is a day to remember for all those who love the environment. Today we will learn about the endangered bird species. Nature lovers, ecologists and bird watchers observe National Bird Day on January 5 every year. In 1984, Charles Almanzo Baboc, a Pennsylvania government official, declared a holiday to celebrate birds. Since then National Birds Day has been observed every year. It is customary to go to the bird sanctuary on that day to see the birds and to take people for bird watching. This day was chosen because the annual Christmas bird count takes place on January 5th. On this day we will learn about the rare species of birds.)

1. ஸ்ட்ரெஸ்மேன்ஸ் பிரிஸில்ப்ரன்ட் (Stresemann's Bristlefront)

இது தான் உலகிலேயே அரிய வகைப் பறவையாகக் கருதப்படுகிறது. இது பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படுகிறது. 2018 ஆம் கடைசியாக ஒரே ஒரு பறவை மட்டுமே கண்டறியப்பட்டது. அதுவும் இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.
(It is considered to be the rarest bird in the world. It is found only in Brazil. At the end of 2018 only one bird was found. I do not know if that is the case now.)

2. ககபோ (Kakapo- Flightless Parrot)

இது நியூசிலாந்து நாட்டில் மட்டுமே இருக்கும் கிளிவகை பறவை. இந்தப் பறவையால் பறக்க இயலாது. இதனை ஆந்தைக் கிளி எனவும் அழைப்பர். காரணாம் அதன் பெரிய தலை, இரவு நேரத்தில் இயங்கும் தன்மை. கிளியைப் போல் மரக்கிளைகளில் அல்லாமல் இவை தரைகளில் வாழும். இதுவும் அரிய வகை அழியும் பறவையினங்களில் ஒன்றாகும்.
(It is the only endemic bird in New Zealand. This bird cannot fly. It is also called the owl parrot. The reason is its large head, which runs at night. Unlike branches, they live on the ground, not on branches. It is also one of the rarest endangered bird species.)

3. இம்பீரியல் அமேசான் (Imperial Amazon )

இம்பீரியல் அமேசான் அல்லது டொமினிகன் அமேசான் எனும் பறவை கரீபியன் தீவு பகுதியில் மட்டுமே வாழ்கிறது. இதனை சிசேரோ அனுவும் அழைக்கின்றனர். 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 50 பறவைகள் மட்டுமே இருந்தன.
(The Imperial Amazon or Dominican Amazon is the only bird living in the Caribbean. It is also called Cicero. According to the census taken in 2019, there were only 50 birds.)

4. ஃபாரஸ்ட் அவ்லட் (Forest Owlet)

ஃபாரஸ்ட் அவ்லட் எனப்படும் ஆந்தை வகை 2018லேயே அழியப்போகும் அரிய வகை பறவையாக அறிவிக்கப்பட்டது. இந்த வகை ஆந்தை இனம் அழிவிற்கு மரங்கள் அழிப்பே காரணமாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஆந்தை மத்திய இந்தியாவில் அதிகமாக இருக்கும்.
(The owl, also known as the Forest Owl, has been declared an endangered species in 2018. This type of owl is said to be responsible for the extinction of trees. This type of owl is abundant in Central India.)

5. (Great Indian Bustard) கிரேட் இந்தியன் பஸ்டார்ட்:

கானமயில், (Ardeotis nigriceps) இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பறவையாகும். இப்பறவை, வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின்படி 500க்கும் குறைவான கானமயில்களே உள்ளன. இப்பறவை ராஜஸ்தான் மாநிலப்பறவையாகும்.
(Kanamayil (Ardeotis nigriceps) is a bird that inhabits the dry grasslands and dry shrubs of India and Pakistan. The bird has been pushed to the brink of extinction by habitat degradation. The current estimate is that there are less than 500 jungles. This bird is the state bird of Rajasthan.)